எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ வெளியீடு 

பெங்களூரு: பாஜகவில்  இணைந் தால் அமைச்சர் பதவியும் லட்சக் கணக்கில் பணமும்  தருவதாக மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி எம்எல்ஏக்களிடம் கர்நாடகப் பாஜக தலைவர் எடியூரப்பா பேரம் பேசியுள்ள ஆடியோ பதிவை கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று வெளியிட்டார்.
 கர்நாடகாவின் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி  எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சி அமைக்க பாஜக முயன்றது. 
தங்கள் கட்சியின் 20 எம்எல் ஏக்களுக்குத் தலா ரூ.50 கோடி வீதம் ரூ.1,000 கோடி வழங்க பா.ஜனதா முயற்சி செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டினார். 
இந்நிலையில், நேற்று குமார சாமி வெளியிட்ட ஆடியோவில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ நாகனா கவுடா கட் குரின் மகன் சரனாவுடன் எடி யூரப்பா பேரம் பேசுவது பதிவாகி யுள்ளது. அதில், ரூ.25 லட்சம் ரொக்கமும் அமைச்சர் பதவியும் உங்கள் தந்தைக்குத் தருகிறோம்  என்று அவர் கூறுகிறார்.
இதற்கிடையே, கர்நாடகாவில்  நேற்று வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு முன்பாக, அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு குமாரசாமி முக்கியப் பொறுப்பு களையும் வழங்கி உள்ளார். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்