ராகுல்: பிரதமர் தவறு செய்துள்ளார்

புதுடெல்லி:  ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ள மோசடியில் நாட்டை ஆளும் பிர தமர் நரேந்திர மோடி பெரும் தவறு செய்துள்ளதாக காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
‘தி இந்து’ நாளிதழில் வெளி யான அறிக்கையுடன்  டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி ரூ.30,000 கோடியை விமா னப்படையிடம் இருந்து  கொள்ளை யடித்து அதை அவரது நண்பர் அனில் அம்பானியிடம் கொடுத் துள்ளார். 
“இதைத்தான் நாங்கள் ரஃபேல் ஒப்பந்த மோசடியில்  பிரதமர் மோடி நேரடியாக ஈடுபட்டுள்ளார் என கடந்த ஓராண்டு காலமாகவே கூறிவருகிறோம். 
“ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பில் பிரான்சுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது பிரதமர் அலு வலகம் இதில் நேரடியாகத் தலை யிட்டுள்ளது. ரஃபேல் மோசடியில் மோடி தவறு செய்துள்ளார். அந்த விவரம் இப்போது அறிக்கையாக வெளிவந்துள்ளது. 
“மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒன்றுக்கு மூன்றாக நன்றாகப் பொய் கூறுகிறார். 
“பிரதமர் மோடியின் தலையீடு காரணமாகவே தாங்கள் அனில் அம்பானியைத் தேர்வு செய்ததாக பிரான்சின் முன்னாள் அதிபரும் ஒப்புக்கொண்டுள்ளார். 
“மோடி அரசாங்கம் உச்சநீதி மன்றத்தில் பொய் கூறியுள்ளது. இதன்மூலம் தீர்ப்பும் கேள்விக்குறி யாகி உள்ளது,” என்றார் ராகுல்.
இதற்கு பதிலடி தந்துள்ள மோடி, “இந்திய ராணுவம் பலமாக இருப்பதை காங்கிரஸ் விரும்ப வில்லை. ரஃபேல் விமான ஒப் பந்தம் ரத்தாகவேண்டும் என்பதே அவர்களது எண்ணம்.  
“காங்கிரசை பொறுத்தமட்டில் நான் செய்த குற்றம், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், இன் றைக்கு அவர்களின் பரம்பரை ஆட்சிக்குச் சவாலாக வந்து விட்டேன் என்பதுதான்.
“எதிர்க்கட்சிகளின் கூட்டணி  ‘மெகா’ கூட்டணியோ அற்புதக் கூட்டணியோ அல்ல. ஊழல் கட்சிகள் இணைந்து ஏற்படுத்தும் கலப்படக் கூட்டணி. இது மக்க ளுக்குத் தேவையில்லை,” என்றார். 

Loading...
Load next