வீணாக்கிய உணவுக்கு 14,000 ரூபாய் அபராதம் வசூல் செய்த உணவகம்

வாராங்கல்: தெலுங்கானாவின் வாராங்கல் பகுதியில் உள்ள கேதாரி உணவகத்தில் உணவு வீணாவதைத் தடுப்பதற்காக அபராதம் விதிக்கப்படுகிறது.
அதாவது தட்டில் உணவு மீதம் இருந்து அதனைக் குப்பைகளில் கொட்ட நேர்ந்தால், வாடிக்கையாளர்கள் ஒரு தட்டிற்கு ரூ.50 கட்டாயம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அந்த உணவகம் விளம்பரப் பலகை வைத்துள்ளது.
இந்த அறிவிப்பை செய்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இந்த அபராதத் தொகை தற்போது ரூ.14,000 வரை வசூல் செய்யப்பட்டுள்ளது என உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.