கள்ளச்சாராய பலி எண்ணிக்கை உயர்வு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவத்தில் முதற்கட்டமாக 28 பேர் பலியானதாக தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.