‘சிலைகளால் அரசுக்கு வருவாய்’

புதுடெல்லி: மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மாயாவதி தன் கட்சி சின்னமான யானை சிலைகளை அமைத்தால், அதற்கான செலவை மாயாவதி அரசு கருவூலத்தில் செலுத்த நேரிடலாம் என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் அது தொடர்பான வழக்கு விசாரணையின் போது கூறியிருந்தார்.
இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், “யானை சிலைகள் மூலம் உத்தரப்பிரதேச சுற்றுலா வளர்ச்சியடைந்துள்ளது. மாநில அரசுக்குத் தொடர்ந்து வருவாயும் வந்துகொண்டு தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.