ஹம்பி தூண்: நால்வர் கைது

பெங்களூரு: யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான ஹம்பி கர்நாடக மாநிலத்தில் உள்ளது.
இங்குள்ள விஷ்ணு கோயிலின் தூண்களைச் சில இளைஞர்கள் எட்டி உதைப்பது, அடித்து உடைப்பது போன்ற காணொளி இணையத்தில் பரவியது.
இதைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஹம்பி காவல்துறையிடம் பிப்ரவரி 2ஆம் தேதி புகார் அளித்தது. இதுகுறித்துத் தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் 4 இளையர்களைக் கைது செய்தனர்.