பெங்களூரு: ஜனதா தள கட்சி எம்எல்ஏக்களை விலை பேசுவதாக வெளியான ஒலிப்பதிவிற்கு எடி யூரப்பா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கர்நாடகாவில் காங் கிரஸ், ஜனதா தளக் கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜகவின் மூவர் கூட்டணி சதி செய்வதாக நேற்று காங்கிரஸ் கூறியுள்ளது. பாஜகவின் எடியூரப்பா, ஜனதா தள எம்எல்ஏக்களை விலை பேசும் ஒலிப்பதிவை முதல்வர் குமாரசாமி நேற்று முன்தினம் வெளியிட்டார். இந்த ஆதாரங்களைச் சபாநாய கர் ரமேஷ் குமார் முன்னிலையில் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோருவேன் என்றும் அவர் சொன்னார். ஆனால், குமாரசாமியின் இக் குற்றச்சாட்டு பற்றி எடியூரப்பா மறுப்புத் தெரிவித்துப் பேட்டியளித் தார். அவர் பேசும்போது, "நான் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கூறி குமாரசாமி வெளியிட்ட ஆடியோ போலியானது. "இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் குரலை மாற்றிப் பேசி ஆடியோ வெளியிட முடியும். "நான் சபாநாயகருக்கு ரூ.50 கோடி வழங்கிய குற்றச்சாட்டை குமாரசாமி நிரூபித்துவிட்டால், அடுத்த 24 மணி நேரத்தில் அரசியலை விட்டே விலகி விடுகிறேன். இது 101% உறுதி. "குமாரசாமி ஒரு நல்ல நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். மக்களின் மதிப்பை காங்கிரசு- மஜத கூட்டணி அரசு இழந்து விட்டதால், பாஜக மீது பழியைப் போடப் பார்க்கிறார் குமாரசாமி. "சினிமா தயாரிப்பாளரான அவரிடம் இதுபோன்ற சித்தரிப்புக் கதைகள் நிறையவே இருக்கின் றன," என்றார். இதற்கிடையே, டெல்லியில் நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைக்க கர்நாடக ஆளுநரை கைப்பாவையாக பயன்படுத்து கிறது பிரதமர் மோடி, பாஜக கட்சித் தலைவர் அமித் ஷா, கர் நாடக பாஜக தலைவர் எடியூரப்பா ஆகியோர் அடங்கிய மூவர் கூட் டணி," என்றார். இதற்கிடையே, கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நால்வர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். காங்கிரசின் ரமேஷ் ஜார்கி ஹோளி, மகேஷ் குமடள்ளி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ் ஆகி யோர் மும்பையில் தங்கியுள்ளனர். இவர்கள் பாஜக தொடர்பில் உள்ள தாகக் கூறப்படும் நிலையில் அவர் கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
காங்கிரஸ்: ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவின் மூவர் கூட்டணி சதி
2 mins read

