பிரியங்கா, ராகுலுக்கு உற்சாக வரவேற்பளிக்க ஏற்பாடு

லக்னோ: காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தி வத்ரா, தமது சகோதரரும் காங்கிரஸ் கட்சியின் தலைவரு மான ராகுல் காந்தியுடன் இன்று உத்தரப்பிரதேசத்துக்குச் செல்ல இருக்கிறார். 
அவ்விருவருக்கும் அங்கு உற் சாக வரவேற்பளிக்க அக்கட்சியின் தொண்டர்கள் திட்டமிட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் நடைபெறும் தேர்தல் தொடர்பான முதல் கூட்டத்துக்கு அம்மாநில காங்கிரசார் தீவிர ஏற்பாடுகளைச்  செய்துவருகின்றனர்.
சுமார் 12 கிலோ மீட்டர் தூரத் துக்கு காங்கிரஸ் கட்சியின் சார் பில் சாலைக்காட்சி ஒன்றும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு உத் தரப்பிரதேசத்தின் முக்கிய தலை வர்களை பிரியங்காவும் மற்றொரு தேசிய பொதுச் செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியாவும் சந்தித் துப் பேச உள்ளதாகக் கூறப்படு கிறது. 
அதன் மூலம், மக்களவைத் தேர்தலுக்குள்ளாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக் கைகளை பிரியங்கா மேற்கொண்டு உள்ளார் என்று அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.