சபரிமலையில் புதிய கட்டுப்பாடுகள்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத வழிபாட்டுக்காக நாளை  திறக்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்குப் பல்வேறு கட்டுப் பாடுகளை போலிசார் விதித்துள் ளனர்.
சபரிமலை  ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கேரளாவில் ஐயப்ப பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நாளை மாலை திறக்கப்படும் கோவில் நடை 17ம் தேதி இரவு 10.30 மணிக்கு சாத்தப்படும். தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையைத் திறந்துவைக்கிறார்.
நாளை முதல் சுவாமிக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அண்மையில் கார்த்திகை மாத பூசைக்காக சபரிமலைக் கோவில் நடை திறந்து இருந்தபோது அப்பகுதியில் நிலவிய பதற்றமான சூழ்நிலையைச் சமாளிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதுபோல இந்த முறையும் தடை உத்தரவு பிறப் பிப்பது பற்றி அதிகாரிகள் ஆலோ சனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, நாளை முதல் 17ம் தேதி வரை காலை 10 மணிக்கு மேல்தான் நிலக்கல்லில் இருந்து சன்னிதானத்திற்குச் செல்ல பக் தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத் தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலிஸ் கட்டுப்பாடுகளை பக்தர் கள் கடைப்பிடிக்க வேண்டும் என் றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.