ராஜபக்சே: 2014 முதல் இந்தியா-இலங்கை  உறவு சரியில்லை

இந்தியாவில் 2014ல் புதிய அரசாங்கம் அமைந்தது முதல் அந்த நாட்டிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட உறவில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக இலங்கையின் எதிர்த்தரப்பு தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். 
இருந்தாலும் தான் தலைமை தாங்கும் எதிர்த்தரப்புக் கூட் டணி, இந்தியாவின் இப்போதைய ஆளும் கட்சியுடன் நல்ல புரிந் துணர்வுடன் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். 
பெங்களூரில் ஒரு கருத் தரங்கில் பேசிய ராஜபக்சே, இந்தியா-இலங்கை உறவைப் பொறுத்தவரையில் தம் நாட்டு டன் ஓர் இந்திய அரசாங்கம் நல்ல உறவைக் கொண்டிருந்தால் இந்தியாவில் அமையும் அடுத்த அரசாங்கமும் அதையே பின்பற்றி நடக்கவேண்டும் என்பதுதான் நெடுங்காலமாக இருந்து வரும் வழமை என்றார். 
அரசாங்கம் மாறும் போதெல்லாம் உடனேயே இரு நாட்டு உறவில் தொல்லைகள் மூண்டு இருப்பதைக் கடந்த கால அனுபவம் காட்டுவதாகவும் ராஜபக்சே கூறினார். 
 

Loading...
Load next