57 போலி மருத்துவர்கள்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநி லத்தில் மருத்துவச் சங்கத்தில் தங்களைப் பதிந்துகொள்வதற்காக 57 பேர் போலியான முதுநிலை பட்டப்படிப்புச் சான்றிதழ்களைத் தாக்கல் செய்து இருக்கிறார்கள். 
அந்தப் பட்டப்படிப்புச் சான்றி தழ்கள் ஒரே மருத்துவக் கல்லூரி யில் இருந்து பெறப்பட்டு இருக் கின்றன. போலி மருத்துவர்கள் 57 பேரும் ஒரே காலத்தில் படித்த வர்களாகவும் உள்ளனர்.
அதிர்ச்சி அளிக்கும் இந்தச் சம்பவம் அம்பலமானதை அடுத்து போலி மருத்துவர்களின் உரிமங் களை மகாராஷ்டிரா மருத்துவ மன்றம் ரத்து செய்துவிட்டது. அவர்கள் மீது சென்ற ஆண்டில் புகார் பதியப்பட்டது. அவர்கள் நான்கு ஆண்டு காலம்  மருத்து வர்களாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர். போலி மருத்து வர்கள் அனைவருமே மும்பையில் இருக்கும் சிபிஎஸ் என்ற மருத்து வக் கல்லூரியிலிருந்து பட்டங் களைப் பெற்றவர்கள். அவர்கள் அனைவரும் 2014-2015ல் அங்கு படித்து அந்தப் பட்டத்தைப் பெற்ற தாகச் சான்றிதழ் தெரிவிக்கிறது. 
இதனிடையே, சிபிஎஸ் கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டு இருக்கிறார் என்றும் அவர் மாணவர்களிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு அதற்குப் பதி லாக போலி பட்டப்படிப்புச் சான் றிதழ்களை விநியோகித்து இருக் கிறார் என்றும் போலிஸ் கூறியது. 
கைதாகி இருப்பவர் டாக்டர் ஸ்நேகல் நியாத்தி என்பவர். இவர் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை பெற்றுக்கொண்டு போலி சான்றிதழை வழங்கி இருக்கிறார். 
அத்தகைய போலி சான்றிதழ் களைப் பெற்றவர்களில் பலர் மகா ராஷ்டிரா மருத்துவ மன்றத்தில் பதிந்துகொண்டு தொழில் நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்