உ.பி.யில் ராகுல், பிரியங்கா பேரணி

லக்னோ: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்துவதற்காக சோனியா, ராகுலைத் தொடர்ந்து பிரியங்காவும் தீவிர அரசியலுக்கு வந்து உள்ளார்.
பிரியங்காவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் களில் ஒருவராக கடந்த மாதம் 23ஆம் தேதி ராகுல் அறிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதி களில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மற்ற 38 தொகுதிகளின் பொறுப்பாளராக இளம் தலைவர் களில் ஒருவரும் ராகுலுக்கு நெருக்கமானவரான ஜோதி ராதித்யா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவர்கள் இருவரும் நேற்று உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத் தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா, ஜோதிராதித்யா சிந்தியா மூவரும் புதுடெல்லியில் இருந்து நேற்று பிற்பகல் லக்னோ விமான நிலையம் வந்தடைந்த போது காங்கிரசார் மேளதாளம் முழங்க உற்சாகமான வரவேற்பு அளித்தனர். லக்னோ நகரின் மையப் பகுதியில் மால் அவென்யூ எனும் இடத்தில் இருக்கும் உத்தரப் பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலக மான 'நேரு பவன்' நோக்கி வேனின்மீது நின்றவாறு அவர் கள் பேரணியாகச் சென்றனர்.
ஏறத்தாழ 15 கிலோமீட்டர் தூரம் சென்ற இந்தப் பேரணியால் அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்களும் தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பேரணி செல்லும் வழிநெடு கிலும் பிரியங்காவை வரவேற்று பல்லாயிரக்கணக்கான பதாகை கள் வைக்கப்பட்டுள்ளன. ஓரிரு இடங்களில் பிரியங்கா தொண் டர்களிடம் பேச மேடை அமைக் கப்பட்டது. பிரயங்கா உத்தரப் பிரதேசம் வந்திருப்பது அம்மாநில காங் கிரஸ் கட்சியினருக்கு புது தெம்பைத் தந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!