புதுடெல்லி ஹோட்டலில் தீ; குறைந்தது 17 பேர் பலி

இந்தியாவின் புதுடெல்லி நகரில் ஹோட்டல் ஒன்று தீப்பிடித்ததை அடுத்து குறைந்தது 17 பேர் மாண்டதுடன் மேலும் மூவர் காயமடைந்திருப்பதாக அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘ஆர்பிட் பேலஸ்’ ஹோட்டலில் இந்தத் தீச்சம்பவம் நடந்தது. இன்று அதிகாலை 4 மணி வாக்கில் மூண்ட தீக்கு மின்சாரக் கோளாறு காரணம் என நம்பப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் ஒரு பிள்ளையும் அடங்குவர் என்று டெல்லியின் தீயணைப்புத் துறை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்