ராகுல்: மோடி ஓர் இடைத்தரகர்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அம்பானியின் இடைத்தரகராக பிரதமர் மோடி செயல்படுகிறார் என்றும் தற்காப்புத் தொடர்பான ரகசியங்களை அவர் மற்றவர் களுக்குத் தெரிவித்துள்ளார்  என்றும் நேற்று குற்றம்சாட்டினார்.
“ரஃபேல் போர் விமானம் கையெழுத்தாவது பற்றி பத்து நாட் களுக்கு முன்பே அம்பானிக்குத் தெரியும்,” என்று கூறிய ராகுல், “ரகசிய சட்டங்களை மீறி தற்காப்பு விவரங்களை யாரோ ஒருவருக்கு பிரதமர் வெளியிட்டுள்ளார். நாட் டின் பாதுகாப்பு விதிகளை அவர் மீறியுள்ளார்,” என்றார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத் தில் பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் விமானங்கள் வாங்கப்படுவதாக பிரதமர் அறிவிப்பதற்கு முன்னரே பிரான்ஸ் அதிகாரிகளை அம்பானி சந்தித்துப் பேசியுள்ளார் என்ற தகவல் வெளியான மறுநாளே ராகுல் காந்தி இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “உலகின் ஆகப்பெரிய தற்காப்பு ஒப்பந்தம் கையெழுத் தாவது பற்றி அனில் அம்பானிக்குத் தெரியும். ஆனால் தற்காப்பு அமைச்சருக்கும் வெளியுறவு செய லாளருக்கும் தெரியாது. இதற்கு பிரதமர்தான் பதிலளிக்க வேண் டும்,” என்று வலியுறுத்தினார்.
உத்தரப்பிரதேசத்தில் இந்தியா வின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போன்று தோற்றமளிக்கும் சகோதரி பிரியங்கா காந்தியுடன் சேர்ந்து ராகுல் காந்தி சூறாவளிப் பிரசாரத்தைத்  தொடங்கியுள்ளார். லக்னோவில் பிரியங்காவை சுமார் இரண்டு லட்சம் பேர் கூடி வரவேற்றனர்.
இதனால், விமான நிலையம் முதல் காங்கிரஸ் அலுவலகம் வரை 20 கி.மீ. கடந்து செல்ல ஐந்து மணி நேரம் ஆனது. அண்மையில் பிரியங்கா, காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து முதன்முறையாக நேற்று முன்தினம் அவர் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு வந்திருந் தார். அன்று மதியம் 12  மணிக்கு லக்னோ விமான நிலையம் வந் திறங்கினார் பிரியங்கா. இவருடன் ராகுல் மற்றும் உபியின் மற்றொரு புதிய பொதுச் செயலாளரான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் வந்தனர். சிறிய பேருந்தின் மேற்புறம் அமர்ந்து பிரியங்கா ஊர்வல மாகச் சென்றார். இதனால் உற் சாகமடைந்த உபி காங்கிரசார் பிரியங்காவுக்கு ஆரவாரமான வரவேற்பு அளித்தனர். விமான நிலையம் முதல் காங்கிரஸ் அலு வலகம் வரை வழிநெடுகிலும்  பிரி யங்காவிற்கு மாலை அணிவித்தும் ரோஜா இதழ்களைத் தூவியும் தொண்டர்கள் வரவேற்றனர்.
அப்போது ஆளும் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.