விசாரணைக்குத் தாயாருடன் வந்த பிரியங்காவின் கணவர்

ஜெய்ப்பூர்: சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தி யின் கணவருமான ராபர்ட் வத்ரா தன் தாயாருடன் ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் முன்னிலையானார்.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராஜஸ்தான் பிகானிரில் வத்ராவுக் குத் தொடர்புடைய நிறுவனம், 2015ல் மிகவும் குறைந்த விலை யில் நிலங்களை வாங்கி பின்னர் அதிக விலைக்கு அந்த நிலம் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டு உள்ளது. இதில் மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முன்னிலையாகும்படி மூன்று முறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியும் வத்ரா முன்னிலையாகவில்லை.
இந்த நிலையில் வத்ராவும் அவரது தாயார் மவ்ரீனும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. 
அதன்படி ஜெயப்பூரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வத்ரா வும் அவரது தாய் மவ்ரீனும் நேற்று முன்னிலையாகினர்.
அமலாக்கத்துறை முன் வத்ரா முன்னிலையாவது இது நான் காவது முறையாகும். இதற்கு முன்பு வெளிநாடுகளில் சொத்து வாங்கியது தொடர்பில் வத்ராவிடம்  மூன்று நாட்கள் விசாரணை நடை பெற்றது. இதற்கிடையே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரி யங்கா, அமலாக்கத் துறையில் முன்னிலையாகும் தன் கணவர் ராபர்ட் வத்ராவுக்காக நேற்று முன்தினம் மாலை ராகுல் காந்தி யுடன் ஜெய்ப்பூர் விரைந்தார்.
பின்னர் ஜெய்ப்பூரில் அம லாக்கத் துறை விசாரணைக்காக வந்த தன் கணவருடனும்  மாமியார் மவ்ரீனுடம் பிரியங்கா காந்தியும் சேர்ந்துகொண்டார். ராகுல் காந்தியும் அவர்களுக்குத் துணையாக இருந்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை பெண் எம்பிக்கள் ஜோதிமணி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன். படம்: இந்திய ஊடகம்

19 Jun 2019

தமிழில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள்