முன்னாள் சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ் வர ராவுக்கு ஒரு நாள் தண்டனை 

புதுடெல்லி: முன்னாள் சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ் வர ராவ், ஒரு நாள் முழுவதும் நீதி மன்ற அறையிலேயே தங்க வேண்டும் என்று நேற்று நீதி மன்றம் வழக்கு ஒன்றில் உத்தர விட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி அவர் அதிகாரிகளைப்  பணி யிட மாற்றம் செய்தார்.
அதாவது சிபிஐ அதிகாரி ஏ.கே. ஷர்மாவை பணியிட மாற்றம் செய்த வழக்கில் நாகேஸ்வர ராவ் நேற்று முன்தினம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை  இதே வழக்கில் அவர் நீதிமன்றத் தில் முன்னிலையானார்.
அப்போது, வழக்கு விசா ரணையை முடித்து உத்தரவைப் பிறப்பித்த உச்ச நீதிமன்றம், நீதி மன்ற உத்தரவை மீறி செயல்பட்ட நாகேஸ்வர ராவ், இன்று ஒரு நாள் முழுவதும் நீதிமன்ற அறையிலேயே அமர்ந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 7ஆம் தேதி உச்ச நீதி மன்றம் அவருக்கு நீதிமன்ற அவ மதிப்பு கடிதம் அனுப்பியிருந்தது.
இதற்கு உச்ச நீதிமன்றத்தில் நாகேஸ்வர ராவ் தனது பதிலைப் பிரமாண பத்திரமாக நேற்று தாக்கல் செய்தார். அதில் அவர், “எனது தவற்றை உணர்ந்து கொண்டேன். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீற வேண்டும் என்ற விருப்பமோ, உள்நோக்கமோ எனக்குக் கனவில்கூடத் துளியும் கிடையாது,” எனத் தெரிவித் திருந்தார். இதையடுத்து நேற்று காலை முன்னிலையான நாகேஸ்வர ராவுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு நாள் நீதிமன்ற அறையில் தங்க உத்தரவிட்டது.