மோடி சேலைக்குப் பெண்களிடம் பெரும் வரவேற்பு

டி-சட்டை, திருமண அழைப்பிதழைத் தொடர்ந்து இப்போது சேலைகளிலும் இடம் பிடிக்கத் தொடங்கிவிட்டார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் மோடியின் குஜராத் மாநிலத்தில் அவரது படம் பொறிக்கப்பட்ட சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இப்போதைக்கு மோடியின் படம் பெற்ற நான்கு வித சேலைகள் விற்கப்படுவதாகவும் அவற்றைப் பெண்கள் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் சூரத் நகர கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார். மற்ற அரசியல்வாதிகளின் முகங்கள் பொறிக்கப்பட்ட சேலைகளும் விரைவில் அறிமுகம் காணலாம் என்றார் திரு ரோனக் ஷா என்ற கடைக்காரர். படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா