பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 70 வாகனங்களில் ஒன்றை மட்டும் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 ராணுவப் படை வீரர்கள் மரணம் அடைந்தனர்.  சம்பவத்திற்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

சம்பவத்திற்கு பின்னர் அப்பகுதிக்கு கூடுதல் ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல் வாமா மாவட்டத்தின் ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, அப்பகுதியைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றிவளைத்தனர். இதன் காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் பயங்கரவாதி களுக்கும் இடையில் துப்பாக்கித் தாக்குதல் நடந்தது. இதில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மரணம் அடைந்தார். இரு பயங்கர வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே,  புல்வாமா மாவட்டம், அவந்திப்போராவில் நடந்த மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் 20க்கும் மேற் பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங் கரவாதிகள் குண்டுகளை வெடிக்கவைத்தனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடத்தினர். காஷ்மீரில் ஸ்ரீநகர் நோக்கி 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நேரத்தில் ஒரு பயங்கரவாதி வெடிகுண்டு காரை ஓட்டி வந்துள் ளார். இந்த கார் வீரர்கள் சென்ற வாகனத்துடன் மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித் துச் சிதறின. காரை ஓட்டியவன் அடில் அகமது எனவும் அவன் காக்கிபோரா பகுதியை சேர்ந்தவன் எனவும் கூறப்படுகிறது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புதுடெல்லியில் உள்ள
லோக் நாயக் மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு வெளியே தீ விபத்தில் சிக்கிய ஒருவரின் உறவினர் கதறி அழுகிறார். படம்: இபிஏ

09 Dec 2019

தீ விபத்து; கட்டட உரிமையாளர் கைது

தொழிற்சாலை தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தில் கருகிய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படம்: ஏபி

09 Dec 2019

டெல்லி தொழிற்சாலையில் கோர தீ விபத்து