அதிகாரம்  முதல்வருக்கா ஆளுநருக்கா என்பதில் மேலும் நீடிக்கும் குழப்பம்  

டெல்லியில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் இடையே யான அதிகார மோதல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
டெல்லி ஊழல் தடுப்பு ஆணை யமும் விசாரணைக் குழு அமைக் கும் அதிகாரமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டி லேயே வரும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  
இதனையடுத்து டெல்லி அதி கார வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர் வுக்கு மாற்றம் செய்யப்பட் டுள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் தொடர்ந்து நிலவி வருகிறது. 
ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக கெஜ்ரிவால் புகார் கூறினார்.    இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. 
அப்போது உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனை யடுத்து மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு டெல்லி அதிகார வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தீர்ப்பில் இணைச் செயலாளர் மற்றும் அந்த அந்தஸ்திற்கு மேல் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டு என நீதிபதி சிக்ரி தெரிவித்தார். 
காவல்துறை தொடர்பான அதிகாரங்கள் மாநில அரசுக்கு இல்லை என்றும் கூறினார். 
ஆனால் மற்றொரு நீதிபதியான அசோக் பூஷண் இதற்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். 
இதன் காரணமாக இவ்வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்