ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து முதல்வர் நாராயணசாமி இரண்டாம் நாளாகப் போராட்டம் 

புதுச்சேரி: மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து  தர்ணா போராட்டம் நடத்திய முதல்வர் நாராயணசாமியும் அவரது தொண்டர்களும் தெரு விலேயே உண்டு, உறங்கியது ஊடகங்களில் தலைப்புச் செய்தி களாக வெளிவந்தன. 
ஆளுநர் கிரண்பேடியின் ராஜ் நிவாஸ் மாளிகையை முற்றுகை யிட்டு முதல்வர் நாராயணசாமி தொண்டர்களுடன் நேற்று 2வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கிரண்பேடி திடீர் பயணமாக டெல்லி புறப் பட்டுச் சென்றார். 
பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றவேண்டும் என வலி யுறுத்தி உள்ள நாராயணசாமி, எங்கள் கோரிக்கைகள் நிறை வேறும்வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். 
இதற்கிடையே அரசின் கோப்புகளில் கையொப்பமிடும் பணியையும் அவர் மேற்கொண்டார்.
நேற்று காலை ராஜ் நிவாஸ் மாளிகைக்கு அதிவிரைவுப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 
ஒருபுறம் முதல்வர் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க, மறுபுறம் ஆளுநர் கிரண்பேடி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
புதுச்சேரி மாநில ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும் முதல்வர் நாரா யணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டு வரப்படும் அனைத்து திட்டங்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும். ஆனால் கிரண்பேடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று நாராயணசாமி குற்றஞ் சாட்டி வந்தார். 

Loading...
Load next