பயங்கரவாதிகள் தாக்குதலில் இரு தமிழக வீரர்கள் மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இரு பாதுகாப்புப் படை வீரர்களும் மரணம் அடைந்துள்ளதாக உள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சீவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியனும் அரியலூரைச் சேர்ந்த சி. சிவசந்திரனும் தாக்கு தலுக்குப் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வீரர்களின் மரணம், அவர்களது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசின் சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார். 
இதுகுறித்து பேசிய வீரர் சுப் பிரமணியனின் தந்தை கணபதி, “தாக்குதல் தொடுத்த பயங்கர வாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும், தீவிரவாதிகளின் சதியை முறி யடிக்கவேண்டும்,” என ஆதங் கத்துடன் தெரிவித்துள்ளார். 
ஓர் ஆண்டிற்கு முன்புதான் இவருக்குத் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் எதுவும் இல்லை.