கிரண் பேடியை மாற்ற கோரிக்கை 

புதுச்சேரி: புதுச்சேரியில் எந்த ஒரு பணியிலும் ஒரு சுமூகமான சூழல் இல்லாமல் குழப்பம் நிலவுவதாகவும் இதைக் களைய துணைநிலை ஆளுநராக உள்ள கிரண்பேடியை மாற்றுவதே சிறந்தவழியாக அமை யும் என்றும் யோசனை கூறியுள் ளார் புதுச்சேரி சட்டசபை சபா நாயகர் வைத்தியலிங்கம்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அவசர அவசரமாக கடிதம் ஒன் றையும் அவர் எழுதியுள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரி ஆளு நர் கிரண்பேடியின் ராஜ் நிவாஸ் மாளிகை முன்பாக, கறுப்புச் சட்டை, வேட்டியுடன் நேற்று மூன் றாவது நாளாக முதல்வர் நாராயண சாமி தர்ணா போராட்டம் நடத்தி னார். அவருடன் மற்ற அமைச்சர் களும் எம்எல்ஏக்களும் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிரண்பேடி மீது நாராயணசாமி யும் நாராயணசாமி மீது கிரண் பேடியும் ஒருவர் மீது ஒருவர் சளைக்காமல் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநர் கிரண் பேடியை மாற்றக்கோரி ராஜ்நாத் சிங்கிற்கு புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கம் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், "மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசாங் கத்தில் கிரண்பேடியின் தலையீடு அதிகமாக உள்ளதால் இந்தப் பிரச் சினையில் மத்திய அரசு தலையிட்டு ஒரு தீர்வு காணவேண்டும்.
"புதுச்சேரியில் ஒரு நிலையான சூழல் இல்லாத நிலையில், சட்ட ஒழுங்கை முறையாகப் பாதுகாக்க வும் நிர்வாகத்தை செம்மைப்படுத் தவும் புதுச்சேரிக்கு திறமையான இடைக்கால நிர்வாகியை மத்திய அரசு நியமிக்கவேண்டும்," எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரின் போராட்டம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, மறுபுறம் இதைக் கண்டுகொள்ளா மல் கிரண்பேடி திடீரென டெல் லிக்கு விரைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆளுநரின் மாளிகை வளாகம் போராட்டக்கள மாக மாறியிருப்பதால் அதிவிரைவு அதிரடிப்படையினரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப் பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!