ராகுல்: புல்வாமா தாக்குதல் தொடர்பாக அரசுக்கு முழு ஆதரவு

புதுடெல்லி: புல்வாமா தாக்குதல் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல்காந்தி, “உயிரிழந்த வீரர்களுக்காக இது துக்கம் அனுசரிக்கவேண்டிய நேரம், சோகத்தை பகிர்ந்துகொள்ளும் நேரம். வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நேரம். நாங்கள் அரசுக்கும் பாதுகாப்‌புப் படை வீரர்களுக்கும் முழு ஆதரவு தருகிறோம். 
“நம் அன்புமிக்க வீரர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் விவாதிக்கப்‌போவதில்லை. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நாம் ஆதரவாக இருக்கவேண்டும்.  காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு முழு ஆதரவளிக்கும்,” என்று கூறியுள்ளார் ராகுல்.