சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பாதிரியாருக்கு 60 ஆண்டு சிறை

திருவனந்தபுரம்: கேரளாவில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக பாதிரியார் ஒருவருக்கு 60 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கண்ணூரில் உள்ள ஒரு  கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியாரான 51 வயது ராபின் வடக்கும்சேரி 2016-ஆம் ஆண்டு மே மாதத்தில் 16 வயது சிறுமி யைக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
சில மாதங்களில் சிறுமி தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத் தார்.  பின்னர்  போலிசாருக்கு அந்தச் சிறுமி கடிதம் ஒன்றை எழுதி தனது நிலையை விளக்கி உள்ளார்.  சம்பந்தப்பட்ட பாதிரி யாரை போலிசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக பாதிரியார்கள் ஐவர் மற்றும் கன்னியாஸ்திரிகள் மீது புகார் செய்யப்பட்ட  நிலையில் சில பாதிரியார்களும் கன்னியாஸ் திரிகளும் தாமாக முன்வந்து கண்ணூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளில் தலச்சேரி ‘போஸ்கோ’ நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த இந்த வழக்கில் ராபின் வடக்கும்சேரிக்கு 60 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப் பளித்தார். 
பாலியல் பலாத்காரக் குற்றச் சாட்டுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் உட்பட மொத்தம்  60 ஆண்டுகள் சிறைத்  தண் டனை விதிக்கப்பட்டது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை பெண் எம்பிக்கள் ஜோதிமணி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன். படம்: இந்திய ஊடகம்

19 Jun 2019

தமிழில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள்