பயங்கரவாதத்தை நசுக்க மோடிக்கு முழு ஆதரவு

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் உட்பட எங்கும் பயங்கரவாதத்தை முற்றிலும் துடைத்து ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்தன. ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் வியாழக்கிழமை அரங்கேற்றப் பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. பயங்கரவாதத்தை ஒழிக்க மோடி அரசுக்கு முழு ஆதரவு வழங்குவது என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. இந்நிலையில், தன்னைத் தற் காத்துக் கொள்ள முழு உரிமையும் இந்தி யாவுக்கு உண்டு என்று அமெரிக்காவும் அறிவித்து இருக்கிறது.

இதனிடையே, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 49 ஆகக் கூடியது. அந்தத் தாக்குதலைக் கண்டித்த நாடுகளின் எண்ணிக்கை 48 ஆகியது. சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகர்களில் பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டு பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக் கும்படி அரசுக்குக் குரல் கொடுத்தனர். இவ்வேளையில், மகாராஷ்டிராவில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் எங்கு பதுங்கியிருந்தாலும் தப்ப முடியாது என்று சூளுரைத்தார். அனைத்துக் கட்சி கூட் டத்திற்குப் பிறகு நேற்று செய்தியாளர் களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீர் உட்பட இந்திய நிலப் பகுதியில் பயங்கரவாதம் துடைத்து ஒழிக்கப்படும் என்றார். அந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், 1947க்குப் பிறகு தனி ஒரு தாக்குதலில் இந்த அளவுக்கு வீரர்கள் கொல்லப்பட்டது இல்லை என்று குறிப்பிட்டு பயங்கரவாதத் திற்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று குறிப்பிட்டார். இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக ஆகாயத் தாக்குதல் உள்ளிட்ட பல வகை சாத்தியங்களையும் பற்றி இந்திய ராணுவம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. காஷ்மீரின் தென்பகுதியில் இருக்கும் புல்வாமா என்ற இடத்தில் வியாழக்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மாண்டுவிட்ட மத்திய ரிசர்வ் போலிஸ் படையைச் சேர்ந்த பாப்லு சந்திரா என்பவரின் வீடு மேற்கு வங்காளத்தில் பாவுரியா என்ற கிராமத்தில் இருக்கிறது. தகவல் அறிந்ததும் அந்த வீட்டில் இருந்த இந்த மாது தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் மயங்கிவிழுந்துவிட்டார். படம்: ராய்ட்டர்ஸ்