‘தொழிலதிபர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய மோடி திட்டம்’

புதுடெல்லி: விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யாத மோடி பல தொழிலதிபர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய திட்டமிட்டுள்ளதாகச் சாடியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
சத்தீஸ்கர் மாநிலம் துராகானில் நடந்த பழங்குடியினர் மாநாட்டில் உரையாற்றிய அவர், “தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, விஜய் மல்லையா, மெகுல் சோக்‌ஷி, லலித் மோடி, நீரவ் மோடி போன் றோருக்கு மத்திய அரசு கோடிக் கணக்கில் பணம் அளித்துள்ளது.
“ஆனால் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 3.50 மட்டும் அளிக்கிறது.
“மேலும் பல தொழிலதிபர் களின் ரூ. 12 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்ய மோடி திட்டமிட்டுள்ளார்.
“பொதுமக்களின் பணம் பறிக்கப்பட்டு, தொழில் அதிபர் களின் கடன் தள்ளுபடி செய்யப் படுகிறது.
“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமானம் கிடைப் பது உறுதி செய்யப்படும். விவ சாயிகளின் வங்கிக் கணக்கில் அந்தத் தொகை நேரடியாக செலுத் தப்படும்.
“சத்தீஸ்கரில் விவசாயிகளின் கடனை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 6 மணி நேரத்தில் தள்ளுபடி செய்தது.
“ஜிஎஸ்டி வரியால் வியாபாரி களும் சிறு மற்றும் நடுத்தர வர்த்த கர்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர்.
“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த தும் ஒரேயொரு வரிதான் இருக் கும். 5 வரிகள் இருக்காது,” என்று பேசினார்.