வெடிகுண்டு வீச்சு ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய விமானப்படை

பொக்ரான்: இந்திய ராணுவ வீரர் கள் 40 பேரின் உயிரைக் குடித்த தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை நேற்று பொக்ரானில் வெடிகுண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்டது.
போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இந்த ஒத்திகையில் ஈடுபட்டன.
இலகு ரக போர் விமானங்கள், தொழில்நுட்ப மேம்பாடு கொண்ட ஹெலிகாப்டர்கள், தரையிலிருந்து ஏவப்பட்டு விண்ணிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ‘ஆகாஷ்’ ஏவுகணை, விண் ணிலுள்ள இலக்கைத் தாக்கி அழிக்க விண்ணிலிருந்து ஏவப் படும் ‘அஸ்திரா’ ஏவுகணை, சிறிய ராக்கெட்டுகள், வெடி குண் டுகள் உள்ளிட்டவை இந்த ஒத்தி கையின்போது சோதிக்கப்பட்டது.
‘வாயுசக்தி’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகையில் தரைப்படைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனவோ, சச்சின் டெண்டுல் கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இரவு பகலாக நடத்தப்பட்ட ஒத்திகை குறித்து விமானப்படை தளபதி பி.எஸ். தனவோ கூறு கையில், “நம்முடைய அரசு உறுதி யளித்து உள்ளபடி, எந்த நேரத்தி லும் தகுந்த பதிலடி கொடுப்பதற் காக இந்திய விமானப்படை தயாராகி வருகிறது.
“அதற்கான பயிற்சியில் ஈடு பட்டுள்ளோம். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்திலும் இறை யாண்மையைக் காப்பதிலும் இந் திய விமானப்படை தகுதியுடன் இருக்கிறது என்பதற்கு உறுதி யளிக்கிறேன்.
“ஏறக்குறைய 140 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இந்தப் பயிற்சி யில் ஈடுபட்டுள்ளன. ஏவுகணை கள், நீண்டதொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆகிய வற்றை வீசியும் பயிற்சியில் ஈடு பட்டு வருகிறோம்,” எனத் தெரி வித்தார்.
“முன்கூட்டியே திட்டமிடுவதற் காகவும் இலக்குகளைத் துல்லிய மாகத் தாக்கி அழிக்கவும் இந்த ஒத்திகையை நடத்துகிறோம்,” என்று இந்திய விமானப்படை வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.
எந்த நேரத்திலும் இந்தியா பதிலடி கொடுக்கக்கூடும் என்று கூறப்படும் நிலையில், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு அருகே இருந்த தனது முகாம்களை பாகிஸ்தான் காலி செய்துள்ளதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில், பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மோடி, “புல்வாமா தாக்குதலால் மக்களின் நெஞ்சில் கொந்தளிக்கும் நெருப்பு என்னுடைய இதயத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது,” என்று பேசி னார். வெளிமாநிலங்களில் இருக் கும் காஷ்மீரிகள் மீதான தாக்குத லுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தால் காஷ்மீரில் இரண்டாவது நாளாக நேற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பாக். இணையத்தளம் முடக்கம்
இதற்கிடையே, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் இணை யத்தளம் ஊடுருவல்காரர்களால் முடக்கப்பட்டது.
இந்த இணையத்தளம் பாகிஸ் தானில் இயங்கினாலும் ஆஸ்திரே லியா, சவூதி அரேபியா, நெதர் லாந்து ஆகிய நாடுகளில் உள்ள வர்கள் தங்களால் பார்க்கமுடிய வில்லை என்று புகார் கூறியதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முகம்மது பைசல் கூறினார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதி லடி கொடுப்பதற்காக இந்தியா இந்த இணையத்தாக்குதலை தொடுத்திருக்கலாம் என்று பாகிஸ் தான் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
 

Loading...
Load next