கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் கறுப்புக் கொடி

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதன் முதல்வர் நாராயணசாமி தனது வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றி உள்ளார். முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை எதிரே நடத்தி வரும் குந்தியிருப்புப் போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்றும் நீடித் தது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆளுநர் கிரண் பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் தலையிடுகிறார். 
“தொடர்ந்து, மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு  அவர் முட்டுக்கட்டையாக இருக் கிறார்.
“மக்கள் நலத் திட்டங் களுக்கான கோப்புகளில் அவர் உடனே கையெழுத்திட வேண்டும்.
“கிரண் பேடியைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து குடியரசுத் தலைவர், பிர தமர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
“ஆளுநர் கிரண் பேடி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக் கும் என்ற நம்பிக்கை உள்ளது.
“எங்களின் இப்போராட்டம் காரணமாக அரசுப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
“இனியும் கிரண் பேடி ஒரு நிமிடம்கூட இங்கு பதவியில் நீடிக்கக்கூடாது என்பதுதான் புதுவை மக்களின் ஒட்டுமொத்த எண்ணமாக உள்ளது,” என்றார் அவர்.
அத்துடன் பொதுமக்கள் பிரச் சினைகள் குறித்து பொது மேடை யில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என முதல் வர் நாராயணசாமிக்குத் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சவால் விடுத்திருந்தார்.
அதனை ஏற்று புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு எப்போது வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார் என்றும் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கிரண்பேடிக்கு எதிரான தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக,  புதுச்சேரி முதல் வர் நாராயணசாமி தனது வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றியுள்ளார். 
அவரைத்  தொடர்ந்து புதுச் சேரி காங்கிரஸ் எம்எல்ஏகளும் தங்களது வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி, ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர் என்று கூறப்படுகிறது.