மகளிர் கழிவறைக்கு சென்ற ஆண் கைது

பனாஜி: கோவா தலைநகர் பனாஜி நகரில் அரசு தலைமை பேருந்து நிலையத்தில் பெண்கள் கழிப்பறைக்குள் சென்று விட்டு வெளியே வந்தவரின் நடை, உடை, பாவனையில் சந்தேகப்பட்ட சிலர் அந்நபரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்நபர் புர்காவின் உள்ளே ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்து சவுரி முடியுடன் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்தது தெரியவந்தது. சம்பவம் அறிந்த போலிசார், விர்ஜில் பாஸ்கோ பெர்னான்டஸ் என்னும் அந்நபரைக் கைது செய்து ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.