ரூ.35 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

அகர்தலா: திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் இருந்து டேங்கர் லாரி ஒன்றில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலிசுக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாராம்நகர் பகுதியில் திரிபுரா போலிசார் வாகனத் தணிக்கையைத் தீவிரப்படுத்தினர். அப்போது டேங்கர் லாரி ஒன்றை மடக்கிய போலிசார், அதில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ எடையுள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
2019-02-18 06:00:00 +0800
தீ விபத்து: விடுதி உரிமையாளர் கைது
புதுடெல்லி: டெல்லி, கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பிட் பேலஸ் தங்கும்விடுதியில் கடந்த 12ஆம் தேதி ஏற்பட்ட 
தீ விபத்தில் 17 பேர் மாண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிசார் அதன் உரிமையாளர் ராகேஷ் கோயல் என்பவரைத் தேடி வந்தனர். ஆனால் அவர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்த ராகேஷ் கோயலை போலிசார் நேற்று
கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப் படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்கக் குற்றப்பிரிவு போலிசார் திட்டமிட்டுள்ளனர்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்