பீகார்: வாகன விபத்தில் 7 பேர் பலி

1 mins read

பீகார்: பீகார் மாநிலத்தில் லாரியும் வேன் ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். சிவான் மாவட்டத்தில் சரை என்ற பகுதியில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஒரு விழாவிற்குச் சென்றவர்கள் இந்த வேனில் பயணம் செய்தனர். அப்போது திடீரென வேன் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த 9 பேர் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலியான 7 பேரும் 20 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.