காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; ஐந்து பேர் மரணம்

காஷ்மீரில் சர்ச்சைக்குரிய பகுதி ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் மாண்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு ஒன்றில் அவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்திலுள்ள பிங்லான் கிராமத்தில் ஜெயிஷ்-இ-முகம்மது அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் தற்போது பதுங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு காஷ்மீரின் அதே புல்வாமா மாவட்டத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 44 துணைய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்திற்கு ஜெயிஷ்-இ-முகம்மது காரணம் எனக் கூறப்படுகிறது.