பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து: கர்நாடகாவில் ஆசிரியை கைது

பெங்களூரு: பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் பதிவிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த ஆசிரியை கைது செய்யப் பட்டுள்ளார். காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் ஒட்டுமொத்த நாடும் கொந்தளிப்பில் உள்ள நிலையில், ஆசி ரியை பதிவிட்ட தகவல் வேகமாகப் பரவியது. இதையறிந்த சிலர் அவரது வீட்டை தீயிட்டுக் கொளுத்த முயன்றனர். இந்நிலையில் விரைந்து வந்த போலிசார், ஆசிரியையும் அவரது வீட்டைக் கொளுத்த முயன்றவர்களையும் கைது செய்தனர்.