விமான உதவியுடன் படை நகர்வு: ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு

புதுடெல்லி: சாலை வழி நடைபெறும் படை நகர்வின் போது தீவிரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதால், இனி ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவத்தினர் வான்வழியாக பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படையினரை விமானம் மூலம் அழைத்துச் செல்லும் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது. இரு தினங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள், சாலை வழியாக 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.