விமான நிலைய ஊழியர்கள் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம்

புதுடெல்லி: விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதில் பத்தாயிரம் ஊழியர்கள் பங்கேற்பர் எனத் தெரிகிறது. 6 விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கான ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 125 விமான நிலையங்கள் உள்ளன. இவற்றுள் டெல்லி, மும்பை விமான நிலையங்கள் 33 ஆண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.