கிரண்பேடியைச் சந்தித்த நாராயணசாமி: மோதல் முடிவுக்கு வர வாய்ப்பு

புதுவை: கடந்த ஆறு நாட்களாக புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டிருந்த புதுவை முதல்வர் நாராயணசாமி, நேற்று மாலை கிரண்பேடியைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவரது போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி புதுவை அமைச்சர வைக்கு எதிராகச் செயல்படுகிறார் என்றும், அரசியலமைப்புச் சட் டத்தை மீறுவதாகவும் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
இதையடுத்து ஆளுநர் மாளி கைக்கு வெளியே அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இரவு பகலாக இந்தப் போராட்டம் நீடித்த நிலையில், தம்முடன் பேச்சுவார்த் தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் ஆளுநர் கிரண்பேடி.
எனினும் பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில் தான் நடைபெற வேண்டும் என்று நாரா யணசாமி வலியுறுத்தியதை கிரண்பேடி ஏற்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை.
இந்நிலையில் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு ஆளுநர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை கிரண் பேடியைச் சந்தித்தார் முதல்வர் நாராயணசாமி. மாநிலத்தின் நலன் கருதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடிவு செய்ததாக அவர் கூறினார்.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே நீடித்து வரும் மோதல் முடிவுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்