காஷ்மீரில் இருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

காஷ்மீரில் பதுங்கியிருக்கும் கிளர்ச்சியாளர்களின் தாயார்களிடம் தங்கள் பிள்ளைகளைச் சரணடைய சொல்லுமாறு அங்கிருக்கும் இந்தியப் படைகளின் தளபதி லெஃப்oனன்ட் ஜெனரல் எஸ் தில்லியன் கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு அந்தத் தாயார்கள் செய்யத் தவறினால் அவர்களது பிள்ளைகள் மடிய வேண்டிருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியப் படைகளைச் சேர்ந்த ராணுவ வாகனம் ஒன்றின் மீதான வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் தளம் கொண்டுள்ள ‘ஜெய்ஷ்-இ-முகம்மது’ பொறுப்பேற்றுள்ளது. இந்தச் சம்பவத்திற்கும் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தானிய அரசாங்கம் கூறியுள்ளது. 

வெடிகுண்டு தாக்குதலை நடத்திய கிளர்ச்சியாளருக்கு 20 வயது எனத் தகவல்கள் கூறுகின்றன. தாக்குதலுக்குத் தகுந்த பதிலடியைக் கொடுப்பதற்கான உள்நாட்டு நெருக்குதலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்நோக்கி வருகிறார். வலுவான பதில் நடவடிக்கையை மேற்கொள்ள ராணுவத்திற்குச் சுதந்திரம் அளித்திருப்பதாகத் திரு மோடி கூறியுள்ளார். 

ஆயினும் பாகிஸ்தான் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பல்ல என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சி உரை ஒன்றின்போது தெரிவித்தார். மேலும் தனது நாட்டை இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்காமல் இருக்காது என்று திரு கான் பதிலுக்கு மிரட்டியுள்ளார்.