நாலரை மணி நேரம் பேசியும் பலனில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியு டன் சுமார் நாலரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின் முதலமைச்சர் நாராயணசாமி,  ஆறு நாட்களாக நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று அறிவித்தார். கடந்த ஆறு நாட்களாக இரவு பகலாக நடந்து வந்த குந்தியிருப்புப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் கூறியுள்ளார். மக்கள் மத்தியில் சென்று பிரச்சினைகளை முன்வைக்க ஏகமனதாக முடிவு செய்துள்ளோம். அரசு சார்பு நிறுவன தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை. வருகிற 22ஆம் தேதி டெல்லியில் இதுதொடர்பாக கூட்டம் நடக்கிறது. அதில் தலைமைச் செயலாளர் கலந்துகொண்டு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார் என்றார்.