பாஜக - சிவசேனா கூட்டணி: ராமர் கோயில் விரைவில் கட்டப்படும்

மும்பை: இந்துமதக் கொள்கை அடிப்படையில் நட்புக் கட்சிக ளான பாரதிய ஜனதா, சிவசேனா ஆரம்பக் காலம் முதல் தேர்தல் களைக் கூட்டணி வைத்தே சந் தித்து வந்தன.
இந்நிலையில் வரும் நாடாளு மன்றத் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் மீண்டும் கைகோர்த் துள்ளன. பாஜக தலைவர் அமித்ஷா நேற்று முன்தினம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது முதல மைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் இருந்தார்.
பின்னர் ஒர்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா, உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் தேவேந் திர பட்னாவிஸ் கூறியதாவது:
வரும் நாடாளுமன்றத் தேர்த லில் எங்களது கட்சிக்கும், சிவ சேனாவுக்கும் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளையும் பகிர்ந்து கொண்டு போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மராட்டிய சட்டமன்ற தேர் தலுக்கும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து விட்டோம். அதன் படி சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் சரிசமமாக தொகுதி களை பகிர்ந்துகொண்டு போட்டி யிடும். 
மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் இந்தக் கூட்டணி ஏற்பட்டு உள்ளது என்றார். அமித்ஷா கூறுகையில், “சிவசேனா எங்களது பழமையான கூட்டணிக் கட்சி. தொண்டர்களின் விருப்பப்படி இணைந்துள்ளோம். மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில் எங்களது கூட்டணி 45 இடங்களில் வெற்றி பெறும்,” என்றார்.
“அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது இரு கட்சிகளுக்கும் பொதுவானது. அது விரைவில் கட்டப்படும்,” என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்