போர்ப் பதற்றத்தைத் தணிக்க ஐநாவை நாடுகிறது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனப் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரே‌ஷி ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டெரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு காஷ்மீரை சேர்ந்தவரே காரணம். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பழி சுமத்தி அப்பகுதி யில் பதற்றத்தை ஏற்படுத்தி வரு கிறது. எனவே, இதில் ஐ.நா. மன்றம் தலையிட்டு இப்பகுதியில் அமைதி ஏற்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்த வேண்டும்.
பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக் களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவை வற்புறுத்த வேண் டும். காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.