கேரளாவில் ‘ரோபோ’ போலிஸ்; வரவேற்று வழிகாட்டுகிறது 

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள மாநிலத் தில் ‘ரோபோ’ போலிஸ் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 
திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைக் காவல் நிலையத்தில் மனித காவல்துறை ரோபோவை கேரள முதல்வர் பினராயி விஜயன் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார்.
இந்த காவல்துறை ‘ரோபோ’ வரவேற்பு அறை பணிகளைச் செய்யும்.
காவல் நிலையத்திற்கு வரும் மக்களுக்கு ‘சல்யூட்’ அடித்து வர வேற்பது, காவல் நிலையத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு வழி காட்டுவது போன்ற பணிகளில் அது ஈடுபடும். 
பொதுமக்களுக்கும் காவல் நிலையத்திற்கும் இடையே முதல் தொடர்பாக செயல்பட்டு மக்களின் குறைகளைக் களைய உதவி புரியும் வகையில் இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களைப் போல இந்த காவல்துறை ‘ரோபோ’ இயங்கும் திறன் கொண்டது என்று  ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் தெரிவித்தார்.
பொதுமக்களின் பொதுவான சந்தேகங்கள், பொதுவான கேள்வி களுக்கு ‘ரோபோ’ விடை அளிக் கும். வருங்காலத்தில் ரோபோவின் பணிகள் மேம்படுத்தப்படும் என்று கேரள காவல்துறையினர் தெரிவித் தனர்.