ராணுவத்தில் ஆள்சேர்ப்பு; காஷ்மீர் மாநிலத்தில் இளையர்கள் ஆர்வம்

பாரமுல்லா: காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் அண்மையில் நடந்த பயங்கரவாத தாக்கு தலில் மத்திய படையைச் சேர்ந்த 40 பேர் மாண்டனர்.
இந்நிலையில் ராணுவத்தை பலப்படுத்துவதற்காக காலி இடங்களை நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ராணுவத்தில் 111 இடங் கள் காலியாக உள்ளன.
இந்த காலி இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை களில்  ராணுவம் ஈடுபட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பில் ராணுவத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. 
இதையடுத்து ஏராளமான இளையர்கள் திரண்டனர்.
மொத்தம் உள்ள 111 இடங் களுக்கு 2,500 இளைஞர்கள் திரண்டனர். 
அவர்களுக்குப் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு இறுதியாக அவர்களில் இருந்து 111 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராணுவ ஆள்சேர்ப்பு தேர்வில் பங்கேற்ற இளையர்களில் ஒருவர், “ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்ற தயாராக இருக் கிறேன். எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற நல்ல வேலை வாய்ப்பாகவும் உள்ளது,” என்றார்.
மற்றொரு இளையர், “ராணுவத்தில் வேலை என்பது மிகப்பெரிய வாய்ப்பு. 
“காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்து உள்ளூரில் பணி நியமனம் செய்தால் பிரச்சினைக் குரிய இடங்களை அடையாளம் காண முடியும், மக்களுடன் எளிதில் பழகி பிரச்சினைகளைக் கண்டறிய முடியும்,” என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள 22 மாவட்டங்களில் ஸ்ரீநகர், அனந்த நாக், பாரமுல்லா, குல்காம், புல் வாமா ஆகிய 5 மாவட்டங்கள் பயங்கரவாதிகளால் அதிகம்  பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாநிலத்தில் மிகவும் குறைவான ஒரு பிரிவினர் மட்டுமே தனி நாடு கோரிக்கைக்கு ஆதர வாக உள்ளனர். 
காஷ்மீர் மக்கள் தொகையில் பிரிவினையை ஆதரிப்போர் 15 விழுக்காட்டினர் மட்டுமே என்று ராணுவ அதிகாரி ஒருவர் குறிப் பிட்டார்.