டுவிட்டரில் காக்கை படங்களை வெளியிட்ட கிரண் பேடி

புதுச்சேரி: புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மீண்டும் டுவிட்டரில் காக்கை படங்களை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பி யுள்ளார்.
கடந்த வாரமும் கிரண்பேடி டுவிட்டரில் காக்கை படங்களை பதிவிட்டார்.
அப்போது சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில் மீண்டும் காக்கை படங்களை அவர் வெளியிட்டுள் ளார்.
இந்த காக்கை படங்கள், கடந்த சில நாட்களாக கறுப்பு உடை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட புதுவை முதல்வர் நாராயணசாமியைக் குறிப்பது போல இருப்பதாக அரசியல் வட் டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

மக்கள் நலத் திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அனுமதி தரவில்லை என்று கூறி கடந்த ஆறு நாட்களாக ஆளுநர் மாளிகை முன்பு கறுப்பு சட்டை அணிந்து முதல்வர் நாராய ணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது முதல்முறையாக காக்கை படத்தை டுவிட்டரில் பதி விட்ட கிரண் பேடி, ‘காக்கை யோகா, தர்ணா போராட்டம் யோகா ஆகுமா’ என்று குறிப் பிட்டிருந்தார்.
இதனால் நாராயணசாமியின் போராட்டத்தை கிண்டல் செய்யும் வகையில் கிரண்பேடி காக்கை படங்களைப் பதிவிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் நேற்று மீண்டும் அவர் காக்கை படங்களை வெளியிட்டுள்ளார்.
இதன் காரணமாக நாராயணசாமி தரப்பினர் கொதிப்படைந்துள் ளனர்.