பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் ஒத்துழைக்க சவூதி இணக்கம்

பயங்கரவாத அச்சுறுத்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு நெருக்குதல் தரவும் இந்தியாவும் சவூதி அரேபியாவும் இணங்கியுள்ளன.
பயங்கரவாதிகளையும் அவர் களை ஆதரிப்போரையும் தண் டிக்க, முதலில் பயங்கரவாதக் கட்டமைப்பை அடியோடு அழிக்க வேண்டியது அவசியம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யும் சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானும் தெரிவித்தனர்.
ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சவூதி இளவரசர் இருநாள் பயணமாக நேற்று முன்தினம் மாலையில் இந் தியா சென்றடைந்தார். முன்னதாக அவர் பாகிஸ்தானுக்குச் சென்றிருந் தார்.
விமானத்தில் வந்திறங்கிய இளவரசரை நேரில் சென்று வர வேற்றார் பிரதமர் மோடி. நேற்று அவருக்கு அதிபர் மாளிகையில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
இருநாட்டுப் பேராளர்களும் உடனிருக்க அவ்விரு தலைவர் களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முதலீடு, சுற்றுலா, வீடமைப்பு, தகவல், ஒலி பரப்பு ஆகிய துறைகளில் ஒத்து ழைப்பை அதிகரிக்க இரு நாடு களும் உடன்பாடு செய்துகொண் டன. தற்காப்பிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இணக்கம் கண்டன.
அதன்பின் இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
“காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த வாரம் இடம்பெற்ற காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் மூலம் பயங்கரவாதம் இன்னொரு கொடூரமான தடத்தைப் பதிவுசெய் துள்ளது,” என்று திரு மோடி குறிப்பிட்டார்.
“இந்தச் சவாலை எதிர்த்துப் போரிட நாங்கள் உடன்பட்டுள் ளோம். அதேபோல, எந்த வகை யிலும் பயங்கரவாதத்தை ஆதரிக் கும் நாடுகளுக்கு நெருக்கடி தரு வதும் அவசியம்,” என்றார் அவர்.
சவூதி இளவரசர் கூறுகையில், “தீவிரவாதமும் பயங்கரவாதமும் இருநாடுகளுக்கும் கவலையளிக் கும் பொதுவான பிரச்சினைகள். பயங்கரவாதத்தை எதிர்கொள்ள உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது உட்பட எல்லா வழிகளி லும் இந்தியாவிற்கு ஒத்துழைப் போம். வரும் தலைமுறைகளுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய எல்லா நாடுகளுடனும் இணைந்து செயல்படுவோம்,” என்று சொன்னார்.
முன்னதாக, இந்திய வெளி யுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை யும் சவூதி இளவரசர் சந்தித்துப் பேசினார். அடுத்ததாக, சீனா, மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்கும் அவர் செல்லவிருக் கிறார்.