மோடிக்கு எதிராக அகிலேஷ் கட்சி வேட்பாளர் போட்டி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ்வும் மாயாவதியும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றனர்.
இந்த நிலையில் இரு கட்சி களும் நேற்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தின. இதில் அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சியும் மாயாவதியின் பகுஜன் கட்சியும் 80 தொகுதிகளில் 75 தொகுதி களைப் பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளன. 
இதன்படி பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதி களிலும் போட்டியிடுகின்றன.
சமாஜ்வாடி கட்சி தனது ஒரு தொகுதியை ராஷ்டீரிய லோக் தள் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி யின் வாரணாசி தொகுதியிலும் முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூரிலும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் களமிறக்கப்படு கிறார்.