காஷ்மீர் மாணவர்கள் வெளியேற கிராமத்தினர் உத்தரவு

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் உள்ளூர் மக்களின் வீடுகளில் குடியிருந்த காஷ்மீர் மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தர விடப்பட்டது.
இதனால் தங்களுடைய உடமை களுடன் மாணவர்கள் தங்க இடமின்றி தவித்தனர்.
புல்வாமா தாக்குதலை ஆத ரித்து சமூக ஊடகத்தில் சில மாணவர்கள் விருப்பத்தைப் பதிவு செய்திருந்ததால் கிராம மக்க ளுக்கு கோபம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து லால்ரு எனும் கிராமத்தில் தங்களுடைய வீடு களில் விருந்தினர்களாக தங்கி யிருந்த மாணவர்களை வெளியேற வீட்டு உரிமையாளர்கள் அதிரடி யாக உத்தரவிட்டனர்.
இது பற்றி பேசிய டேராபாஸி மாவட்ட நீதிபதி பூஜா சியால், முன்னாள் மாணவர்களில் நான்கு பேர் புல்வாமா தாக்குதலை ஆதரித்து சமூக ஊடகங்களில் விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறினார். இருந்தாலும் சில மாணவர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தங்க இடம் மறுக்கப்பட்டதால் சில மாணவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர். இங்கேயே தங்கும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பூஜா சியால் சொன்னார்.
யூனிவர்சல் கல்லூரியைச் சேர்ந்த பொறியியல் மாணவரான ராஜா ஹஃபிசுல்லா, வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறவில்லை யென்றால் அடித்து வெளியேற்று வோம் என்று வீட்டு உரிமையாளர் கள் மிரட்டியதாக கூறினார்.
அந்த கிராமத்தில் சுமார் 25 முதல் 30 காஷ்மீர் மாணவர்கள் வசித்து வந்தனர். 
பாதுகாப்புக்கு உத்தரவாதம்  இல்லையென்பதால் வீட்டை காலி செய்துவிட்டதாக மாணவர்கள் கூறினர்.
ஆனால் புல்வானா தாக்குதலை ஆதரித்து தாங்கள் கருத்து எதுவும் வெளியிடல்லை என்று மாணவர்கள் கூறினர்.