‘வாய்ப்புகள் நிறைந்த நாடு இந்தியா’

சோல்: தென்கொரியாவில் வர்த்த கர்களிடையே பேசிய பிரதமர் மோடி, வாய்ப்புகள் நிறைந்துள்ள இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இரண்டு நாள் பயணம் மேற் கொண்டு பிரதமர் மோடி நேற்று தலைநகர் சோல் வந்து சேர்ந்தார்.
முதல் நிகழ்ச்சியாக அவர் வர்த்தகர் மாநாட்டில் பங்கேற்று பேசினார்.
“நேரடி முதலீடுகளுக்கு சந்தை களை மிகவும் தாராளமாக திறந்து வைத்துள்ள நாடுகளில் இந்தியா வும் ஒன்று, 90க்கும் மேற்பட்ட துறைகளுக்கு தானியக்க முறை யில் அனுமதி கிடைத்துவிடும். எல்லா துறைகளையும் உள்ளடக் கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காகத் தான் நிதித் துறையையும் வலுப் படுத்தும்  முயற்சிகளை எடுத்து வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக 300 மில்லியனுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு உள்ளன. தற்போது 99 விழுக்காட் டினருக்கு வங்கிக் கணக்கு உள்ளது. இவர்களுடைய வங்கிக் கணக்குகளில் 12 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்யப் பட்டுள்ளது,” என்று பிரதமர் மோடி கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்