மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பை நோக்கி பயணம்

நா‌ஷிக்: மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாபெரும் பேரணியைத் தொடங்கியுள்ளனர்.
நா‌ஷிக்கில் குவிந்த அவர்கள் கால் நடையாக மும்பையை நோக்கி பயணத்தைத் தொடங்கி யுள்ளனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய பிரதான கோரிக் கையாகும்.
ஆறு மாதங்களுக்கு முன்பு இதே போன்ற பேரணி நடை பெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவி உறுதியளித்திருந் தார்.
ஆனால் தங்களுடைய கோரிக் கைகளை பாரதிய ஜனதா அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை என்று கூறியுள்ள விவசாயிகள் மும்பையை நோக்கி பேரணியைத் தொடங்கியுள்ளனர்.
மிரர் ஊடகத்துக்கு தனிப்பட்ட பேட்டியளித்த விவசாயிகள், வன உரிமைச் சட்டத்தை மகாராஷ்டிரா அரசாங்கம் அமல்படுத்த வேண் டும் என்று வலியுறுத்தினர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் மற்றொரு கோரிக்கை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்