புல்வாமா தாக்குதல் குறித்து ஐநா கடும் கண்டனம்

நியூயார்க்: காஷ்மீர் மாநிலம் புல் வாமாவில் ஜெய்ஷ்=இ=முகம்மது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் எனப்படும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள்  கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் ஆன நிலையில் தாக்கு தலுக்கு ஐநா பாதுகாப்பு மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 
‘ஜம்மு காஷ்மீரில் தற்கொலைப் படைத் தாக்குதல்’ என்ற தலைப்பில் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “ஜம்மு காஷ்மீரில் கடந்த 14ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்தியாவின் துணை ராணுவப் படையினர் 40 பேர் கொல்லப்பட் டனர். இது மிகவும் கொடூரமானது; கோழைத்தனமானது.

“இந்தத் தாக்குதலுக்கு துணை புரிந்தவர்கள், உதவி செய்தவர்கள், நிதியுதவி செய்தவர்கள், ஆதரவு வழங்கியவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். 
“பாதுகாப்பு மன்றத்தில் இடம் பெற்றுள்ள எல்லா உறுப்பு நாடுக ளும் அனைத்துலக சட்டத்துக்கும் மன்றத்தின் தீர்மானத்துக்கும் கட்டுப்பட்டு, ஒத்துழைத்து நடக்க வேண்டும்.
“மேலும் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களின் ஆழ்ந்த வேதனையையும் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் அரசுக்கும் இரங்கல் தெரிவிக்கிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவாகக் குணமடைந்து அமைதி திரும்ப வேண்டும்.

“தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. அது எந்த நோக்கத்துக் காக இருந்தாலும், எங்கு நடந்தாலும், எப்போது நடந்தாலும், யார் செய்தாலும் அதை ஏற்கமுடியாது,” என்று பாதுகாப்பு மன்ற அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா பாதுகாப்பு மன்றத்தில் இடம்பெற்றுள்ள ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகள் இந்த கண்டன அறிக்கையை வரவேற்றுள்ளன. இருப்பினும் மற்றொரு நிரந்தர உறுப்பு நாடான சீனா எதுவும் தெரிவிக்கவில்லை.
ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை அனைத்துலக தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிக்கு ஐநா அமைப்பின் இந்த அறிக்கை ஊக்கமாக அமைந்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஒடிசாவில் கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக கிராமவாசிகள் 12 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்தபடியே  ஆற்றைக் கடந்து சென்ற அவலம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  படம்: ஊடகம்

23 Aug 2019

கர்ப்பிணியை கட்டிலில் 12 கி.மீ. தூரம் சுமந்துசென்ற கிராமமக்கள்

மகளைக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி.

23 Aug 2019

காங்கிரஸ்: மகளைக் கொன்றவரை நம்பும் சிபிஐ, சிதம்பரத்தை நம்பவில்லை

அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலைக் கட்டுப்படுத்தும் முயற்சி இது. 
“அவரைக் கைது செய்யவேண்டிய அவசியமே இல்லை. எந்த ஒரு விசாரணை அமைப்பின் முன்பும் முன்னிலையாகி பதில் சொல்ல என் தந்தைக்கு எந்த நீதிமன்றமும் உத்தரவிடாதபோது கைது ஏன்? சட்டரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளேன்,” என்று கூறினார் கார்த்தி சிதம்பரம். படம்: ஊடகம்

23 Aug 2019

'ப.சிதம்பரம் கைது பழிவாங்கும் நடவடிக்கை'