பாகிஸ்தானை திட்டினால் மலிவு விலையில் உணவு

ஜக்தல்பூர்: சத்தீஸ்கர்  மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள சிறு உண வக உரிமையாளர், பாகிஸ்தான் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி உள்ளார். 
தள்ளுவண்டியில் வைத்து கோழி வறுவல் வியாபாரம் செய்து வரும் அவர், ‘பாகிஸ்தான் ஒழிக’ என கூறும் வாடிக்கை யாளர்களுக்கு வறுத்த கோழி கால் (லெக் பீஸ்) விலையில் 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். 
இதுபற்றி அவர் கூறும்போது, ‚“மனிதநேயத்தை பாகிஸ்தான் ஒருபோதும் மதிப்பதில்லை என் பதால் பாகிஸ்தான் ஒழிக என அனைவரும் சொல்ல வேண்டும் என்று இந்த அறிவிப்பை வெளி யிட்டுள்ளேன்,” என்றார்.
இவரைப்போலவே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சர்பேஸ்வர் பத்ரா என்பவரும் தமது கடைக்கு வருவோர் பாகிஸ்தான் ஒழிக என்று முழக்கமிட்டால் தேநீரை 2 ரூபாய்க்கும் காப்பியை 3 ரூபாய்க் கும் வழங்குவதாக அறிவித்துள் ளார். புவனேஸ்வர் நகரின் மஞ் சேஸ்வர் பகுதியில் இவர் காப்பிக்கடை நடத்தி வருகிறார்.
கட்டணத் தள்ளுபடி அறிவித் திருக்கும் வியாபாரி களில் ஒருவரான அஞ்சல் சிங்.